மகப்பேறு தாமதமடைதலுக்கான சோதனைகள்
மருத்துவரால் தனித்தனியாக தம்பதியர் இருவரும் அவர்களின் மருத்துவ, பாலியல் மற்றும் பழக்கவழக்கங்கள் போன்றன பரீட்சிக்கப்பட்ட பின்னர் சில ஆய்வுகூடப் பரிசோதனைகள் தேவைக்கேற்ப மேற்கொள்ள அறிவுறுத்தப்படுவர். முதலில் நோவற்ற அதிக சிரமம் அற்ற சோதனைகள் மேற்கொள்ளப்படும். பின்னரே அடுத்தபடிநிலை பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவர்.
உதாரணம் –
- SFA – Seminal Fluid Analysis – சுக்கிலப் பாய மதிப்பீடு
- பரிசோதனை நாளுக்கு முன்னதாக 48 – 72 மணித்தியாலங்கள் உடலுறவு மேற்கொள்ளாதிருந்து தற்புணர்ச்சி ( Masturbation) முறையில் சுக்கிலப்பாயம் சேகரிக்கப்படும்.
- சுக்கிலப்பாயம் சுத்தமான, அகன்ற வாயுடைய போத்தலில் சேகரிக்கப்பட்டு 30 நிமிடத்தினுள் ஆய்வுகூடத்திற்கு அனுப்பப்பட்டு பரிசோதிக்கப்பட வேண்டும்.
- சாதாரண SFA பெறுமானங்கள்
களவளவு – >2ml
PH – >7.2
விந்து செறிவு – 20million/ml
விந்து அளவு வீதம் – >50% grade a & b
உருவவியல் வீதம் – >30% சாதாரண வடிவம் - <10,000,000/ml (100 மில்லியன்/ml) உள்ள ஒருவரில் விந்து உற்பத்தியைத் தூண்ட சிகிச்சை அளிக்கப்படும். சிலரின் சுக்கிலப்பாயத்தில் விந்துகள் அற்ற நிலை (Azoospermia) காணப்படின் மேலதிக சோதனைகளின் பின் மகப்பேற்றின்மையை ஏற்றுக்கொள்ள அல்லது மாற்றுமுறைகளில் மகப்பேறடைய ஆலோசனை வழங்கப்படும்
உதாரணம் – விந்துவங்கியிலிருந்து விந்தைப்பெற்று சோதனைக்குழாய் மூலம் கருவை வளர்த்தல் - சிறுநீர்வழித்தொற்று இருப்பின் ஏற்ற வகையில் சிகிச்சையளிக்கப்படும்.
- குறைவான கனவளவு தவறான சேகரிப்பினால் ஏற்படுகின்ற போதும் தொடர்ச்சியான கனவளவுக்குறைவு விந்து கடத்தப்படும் பாதையில் நோய் நிலைமைகள் இருத்தலைக்காட்டும்
- சுக்கிலப்பாயத்தில் ஏற்படும் தொற்று மகப்பேற்றை தாமதமடையச்செய்யும் ஆணின் காரணிகளில் பிரதான பங்கு வகிக்கின்றது. ஒருவாரத்திற்கு வழங்கப்படும் Antibiotic மருந்தினால் இத்தொற்று முற்றாக அழிக்கப்படும்.
- சூலிடலை அறிதல்
ஓமோன்களின் அளவை அறிதலினூடாக (Day 21 Progsterone Assay), கருப்பை அகவணி இழைய மாதிரிச் சோதனையூடாக, தொடர்ச்சியான ஸ்கானின் மூலமாக, மற்றும் லப்ரஸ்கோமி (Laparoscopy) சோதனையூடாக சூலிடல் நிகழ்கின்றதா எனவும், சூலிடல் எப்போது நிகழ்கின்றது எனவும் அறியலாம்.
- கருப்பைக்குழாயின் கட்டமைப்பை அறிதல்
- Hysterosalphingogram எனப்படும் பரிசோதனை – கதிர்வீச்சு சாயம் கருப்பைக்குழியினுள் செலுத்தப்பட்டு கருப்பைக்குழி மற்றும் கருப்பைக் குழாய்களின் கட்டமைப்பு அறியப்படும். இவ் வகைச் சோதனைகள் மாதவிடாய் சக்கரத்தின் முதற்பாதியில் மேற்கொள்ளப்படும்.
- Laparoscopy & Dye test
அதிக உட்புகுதன்மையுடைய பரிசோதனையாகும். ஏனைய சோதனை முடிவுகளில் மகப்பேறின்மைக்கான காரணம் அறிப்படாதவிடத்து பொதுவாக இறுதியில் மேற்கொள்ளப்படும் பரிசோதனையாகும். இப் பரிசோதனை மூலம் நேரடியாக கருப்பைக்குழி, வயிற்றறைக்குழி மற்றும் இடுப்புக்குழி என்பவற்றைக் காட்சிப்படுத்த முடிவதுடன், பெறப்படும் விம்பங்களை எதிர்காலத் தேவைகளுக்காக சேமித்து வைக்கவும், ஏனைய துறைசார் வல்லுனர்களுடன் ஆலோசிக்கவும் முடியும்.
மகப்பேறு தாமதமடைதலுக்கான சிகிச்சை முறைகள்.
மேற்படி சோதனைகளின் மூலம் காரணியைக் கண்டறியப்படும் பட்சத்தில் அதற்குரிய சிகிச்சைகள் தனித்துவமான முறையில் மருந்துகள் மூலமாகவோ அல்லது சத்திரசிகிச்சை மூலமாகவோ வழங்கப்படும்.
- சூலிடலைத் தூண்டுவதற்காக (clomifene citrate ) வகை மருந்துகளும் Laparoscopy உதவியுடன் சூலகத்தைத் துளையிடலும் நடைமுறையிலுள்ளது.
- Intra uterine insemination (IUI) என்பது சூலிடல் தூண்டலைத் தொடர்ந்து, சூல்கள் சேகரிக்கப்பட்டு விந்தை ஆய்வுகூடத்தில் செயற்கை முறையில் சூலுடன் சேர்த்து கருக்கட்டலை ஏற்படுத்திய பின்னர் கருக்கட்டப்பட்ட சூல் அல்லது சூல்களை மீள கருப்பைக்குழியினுட் பதித்தலாகும். 35 வயதின் கீழான பெண்களில் சக்கரம் ஒன்றுக்கான வெற்றி வீதம் (Success Rate) 30 வீதம் ஆகும்.
- புற்றுநோய்க்கான சிகிச்சை பெறுவோர் மற்றும் கதிர்வீச்சுக்கு உட்படுவோரில் சூல் அல்லது விந்து எதிர்காலத் தேவைக்குப் பயன்படுத்தப்படும் பொருட்டு சேமிக்கப்படுவதுண்டு.
- சிகிச்சைகள் யாவும் பெண்நோயியல் – மகப்பேறற்றியல் விஷேட மருத்துவநிபுணர்களின் ஆலோசனைப்படி அவர்களின் விஷேட கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்படும்.
Dr. Thevaranjana Puvanendiran
Diabetic centre
Teaching Hospital- Jaffna