21.2 சமூக – உளநல விடயங்கள்
சிறுவர்களின் சலரோகம் சம்பந்தமான சமூக – உளநலம் சார்பான விடயங்கள்.
நோய் பற்றிய உளத்தாக்கம் பிள்ளையிலும் குடும்ப உறுப்பினர்களிலும் முன்னரே இருக்கின்ற பிரச்சினைகளைப் பெரிதாக்கும்.
அதாவது தவறான ஆரம்ப பொருத்தப்பாடுகள், மன அழுத்தம், மன எழுச்சி, குறைந்த தன்னப்பிக்கை என்பனவே அவையாகும். இதைவிட இன்னும் சில பிரச்சினைகளும் உள்ளன.
- அதிகம் கவனமெடுக்கும் பெற்றோர்
- மிக இறுக்கமான சலரோகச் சிகிச்சை முறைகள்
- நோயை இனங்கண்ட சிறிது காலத்துக்கு அதை ஏற்க மறுத்தல்
- வேறுபட்டு இருப்பதாக உணர்தல்
- தோழர்களால் கேலிசெய்யப்படுதலும் வேறுபடுத்தப்படலும்.
சமூக உளநலம் சார்ந்த விடயங்களுக்கான காரணங்களாவன நீண்டகால மருந்துப் பாவனை, சலரோக நோயாளிகள் மீதான சமூகத்தின் எண்ணக்கருக்கள், சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படலும் மறுக்கப்படலும், நோயால் ஏற்படும் மற்றைய விளைவுகள் என்பனவாகும்.
இத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்ளும் முறைகள்.
- உளவள, சமூக உதவிகளைப் பெற்று அது சம்பந்தமான பிரச்சினைகளைத் தீர்க்கவும்.
- நோயைச் சமாளிக்கும் திறமைகளைக் குழந்தைகளில் வளர்க்கவும்.
- குடும்பத்திலும் நண்பர்களிலும் சுமுகமான தொடர்பைப் பேணவும்.
- பிள்ளைக்குத் தேவையான போது அறிவுரை வழங்கவும்.
பெற்றோர் அல்லது குடும்பத்தவருடைய உள – சமூக செயற்பாடுகள்
சில பெற்றோர்கள் நோய் இருப்பதை ஏற்றுக் கொண்டு தகுந்த சிகிச்சையளிக்க உதவுகின்றார்கள். சிலர் அதை ஒரு பிரச்சினையாக எண்ணி, ஏற்க மறுக்கிறார்கள். சில பொதுவான பிரச்சினைகள் கீழே தரப்பட்டுள்ளன.
- இரத்தத்தில் வெல்லம் குறைவதால் ஏற்படும் விளைவுகளைச் சந்திக்கப் பயப்படுதல்.
- பிள்ளையின் நடத்தை, பாடசாலை, எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படுதல்
- சிகிச்சை முறையில் இரு பெற்றோரினதும் பங்களிப்புத் தொடர்பான வாக்குவாதங்கள் யாரால் நோய் காவப்பட்டது என ஒருவரை ஒருவர் பழிசுமத்துதல்.
- துக்கம் நெருக்கீடு, கோபம், மனஅழுத்தம், என்பவற்றால் பாதிக்கப்படுதல்.
- பண நெருக்கடி. உதாரணம் – பிரயாணங்கள், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் வேளையில் ஏற்படும் நிதி நெருக்கடிகள்
உங்களுக்கு உபயோகமான சில தகவல்கள்
- உங்கள் பிரச்சினைகள் பற்றி வைத்தியர், சலரோகம் பற்றி அறிவுறுத்தும் தாதி, உளவியலாளர், சமூக சேகவர் ஆகியோரிடம் கலந்துரையாடுங்கள்.
- ஒரே வகையான விடயங்களை மற்றைய பெற்றோர்கள் எவ்வாறு கையாளுகின்றார்கள் என்பது பற்றி பகிர்ந்துகொள்ளுங்கள்.
- தினசரி அட்டவணை ஒன்றைத் தயாரியுங்கள். அடையவேண்டிய இலக்குகளை நிர்ணயம் செய்யுங்கள். உங்கள் குழந்தையுடன் கூட்டுமுயற்சியில் ஈடுபடுங்கள்
- பிள்ளையைப் பராமரிக்கின்ற ஏனையவர்களுக்கும் சிகிச்சை முறையைச் சொல்லிக் கொடுங்கள். இரத்த வெல்லத்தின் அளவைக் கண்காணித்தல், இன்சுலின் கொடுத்தல், பிள்ளையின் நாளாந்தப் பராமரிப்பு என்பன பற்றிக் கற்பியுங்கள்.
- தகுந்த அமைப்புகளிடமிருந்து சமூக, பொருளாதார உதவிகளைப் பெறுங்கள்.
- நோயினால் குடும்பத்தில் எழும் பிளவுகளைத் தவிர்த்து ஒற்றுமையாக குழந்தையிற் கவனம் செலுத்துங்கள்.
- இரு பெற்றோர்களும் சம அளவான பொறுப்புணர்வுடன் குடும்பத்திலுள்ள எல்லாப் பிள்ளைகளையும் கவனிக்க வேண்டும். சாயங்கால நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, யோகாசனம், தியானம், பிரார்த்தனை என்பவற்றில் குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் பங்கு பெறுதல்.
பிள்ளைகளுக்கும் சுகாதார உத்தியோகத்ததுகளுக்கும் இடையான
திறந்த உரையாடல்கள் சிறந்த கட்டுப்பாட்டுக்கு உதவுகின்றன.