பயிற்றம் ரொட்டி
தேவையான பொருட்கள்
பயற்றம்மா, லீக்ஸ், கோவா, கரட்
பயற்றம்மா | – | ½ Kg |
லீக்ஸ் | – | 100g |
கோவா | – | 100g |
கரட் | – | 100g |
முருங்கை இலை | – | 100g |
சண்டி இலை | – | 100g |
வெங்காயம் | – | 100g |
பச்சை மிளகாய் | – | 50g |
உப்பு | – | தேவையானளவு |
கடுகு, சீரகம் | – | சிறிதளவு |
தண்ணீர் | – | தேவையானளவு |
எண்ணெய்(நல்லெண்ணைய்) | – | சிறிதளவு |
செய்முறை
பயற்றம்மாவினை நன்றாக அரித்துக் கொள்ளவும். பின்னர் கரட், லீக்ஸ், கோவா, முருங்கை இலை, சண்டி இலை, வெங்காயம், பச்சை மிளகாய், என்பவற்றை சிறு சிறு துண்டுகாளக வெட்டிக் கொள்ளவும், பின்னர் பயற்றம்மா வெட்டிய மரக்கறி, இலைவகை தேவையான அளவு உப்புச் சேர்த்துக் குழைக்கவும். பின்பு ரொட்டி போல் தட்டி தோசைக் கல்லில் சுட்டு எடுக்கவும்.
Posted in சிந்தனைக்கு