“குழலினிது யாழினிது என்பர் தம்
மழலைச்சொல் கேளாதவர்”
என்பதை யாமறிவோம். இவ்வாறான பெறுதற்கரிய குழந்தைச் செல்வங்களின் வாழ்க்கை முளையிலேயே கருவதற்கு யார் காரணம்?? எழுத்தறிவு வீதம் மிகவும் உயர்வாக உள்ள யாழ்மாவட்டத்தில் தவறுதலாக நச்சுப்பதார்த்தங்களை உட்கொண்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகின்றது. சராசரியாக 4 குழந்தைகள் இவ்வாறாக யாழ் வைத்தியசாலைகளில் மாதந்தோறும் அனுமதிக்கப்படுகின்றார்கள்.
பெற்றோரிடம் அல்லது குழந்தையைப் பராமரிப்பவரிடம் இது பற்றி வினவினால் “சோடா என்று நினைத்து மண்ணெண்ணையைக் குடிச்சிட்டான்”, “ஆச்சிக்கு மனநோய் இருக்கு அவவின்ர மருந்துகளைத்தான் குடிச்சிருக்க வேணும்” , “ பிள்ளை சத்தி எடுக்கும் போது நீலக்குளிசை ஒன்று இருந்தது” , “பக்கத்து வீட்டு அன்ரி வீட்டில் இருந்த மருந்துகளைக் குடிச்சிட்டான்” இப்படியெல்லாம் அறிக்கையிடுவார்…. இதற்கு யார் பொறுப்பு??? இது பற்றி யார் சிந்திக்க வேண்டும்?? இவற்றைத் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்??
மண்ணெயை குளிர்பானப் போத்தலினுள் சேமிக்காதீர்கள்
மண்ணெய் போன்ற பெற்றோலியப் பொருட்கள் இரசாயனப் பொருட்கள், சுடுநீர் மருந்துப்பொருட்களை குழந்தைகள் அனுகாத வகையில் சேமியுங்கள்.
அயலவர் வீட்டிற்கு குழந்தைகள் செல்லும் போது மிகவும் கவனமாக இருங்கள்.
உங்கள் குழந்தைகளை கண்காணிப்பது யார் பொறுப்பு???